Skip to main content

தத்துவ கவிதைகள்

 

தத்துவ கவிதைகள்
----------------------------------

இறப்பு வீட்டுக்கு சென்ற........
பல அனுபவங்களை..........
பார்த்தபோதுகேட்ட போது.....
ஒரு உண்மை புலப்பட்டது......
இறந்த பின் எல்லோரும்........
புனிதராகிவிடுகிறார்கள்.......
இப்போதுதான் எனக்கும்......
இறப்பில் ஒரு ஈர்ப்பு வருகிறது.......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
மறதி வாழ்க்கையில்......
ஒரு இன்பம்........
மரணம் வாழ்க்கையில்......
பேரின்பம்............
மரணத்துக்காக ஏங்கும்.....
ஆத்தாவுக்கு புரியும்......
மரணத்தின் இன்பம்........!
&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
முயற்சி என்பது.....
வெற்றியல்ல........
வெற்றி பெறவைப்பது........
பயிற்சியில்லாத முயற்சி......
தோற்றுப்போகும்........
முயற்சியும் பயிற்சியும்.....
இரட்டை குழந்தைகள்....!
&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
வலிகளையும்......
துன்பங்களையும்......
மறக்க உதவும் மருந்து......
புன்னகை........
இறப்புக்கு நிகரான.......
பிரசவவலியை அனுபவித்த.....
தாயின் வலி.......
குழந்தையை பார்த்து.....
புன்னகைத்ததும்......
மறைந்து போகிறது......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
ஒருவனது மரணத்தில்.....
இத்தனை குதூகலமா..?
பாடைக்கு முன்னால்.....
குத்தாட்டமும் ......
பட்டாசுகளும்.........!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிதை
வெறும் கருத்தல்ல.....
காயத்தின் வடுவுமல்ல....
மறந்த நினைவை.......
மீட்கும் வீணையுமில்லை.....
நிகழ்கால நிகழ்வின்......
புல்லாங்குழலூமல்ல......
ஆத்தாமாவுக்கு யாரால்...?
விளக்கம் கூறமுடியும்...?
கவிதையும் அதேபோல்.......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் விவசாயின் உயிர்

போராட்டம் தோன்றாது

பிரபஞ்ச வணக்கம்