Skip to main content

சமூக சிந்தனை கவிதைகள்

 நான் பறித்த கடைசி பூ

கவிப்புயல் இனியவன் 2013 
-----------
சாமிக்கு பூ பறித்து ..
வைப்பதை பழக்கமாக கொண்டவன் ..
சட்டென்று ஒருநாள்-பூவை
பறித்த என்மனதில் ஒரு -சஞ்சலம்
மரத்தை பார்த்தேன் -அதன் அழுகையை
மலரை பார்த்தேன் -அதன் ஏக்கத்தை
தாயையும் பிள்ளையையும் பிரித்த சோகம்
இதுதான் நான் பறித்த கடைசி பூ
கவிப்புயல் இனியவன்
இவன் ....
காதல் தோல்வியால் ...
கவிஞனாக வில்லை ...
எல்லாவற்றிலும் ...
காதல்  கொண்டதால் ...
கவிஞன் ஆனவன்.....!!!

&
கவிப்புயல் இனியவன்
இதுதான் உண்மை
கவிப்புயல் இனியவன்
கடலளவு ....
கற்பனையுடன் ...
காட்டாற்று ...
வெள்ளமாய்க்கரை...
புரண்டு ...
வந்த வார்த்தைகள் ...
எல்லாம் கன்னியவள்.... 
கன்னக்குழிக்குள் ...
கச்சிதமாய் மறைந்து விட்டன .....!!!

சொல்ல நினைத்துத் ...
துடித்தவை தொண்டைக்... 
குழிவறை வந்து ...
இருதலைக்கொள்ளிபோல் ...
திணறிக்கொண்டு ...
தடுமாறுகிறது ....! 

ஒத்திகை பார்த்து 
வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு 
முன்னே ஓடியேவிடுகின்றன.

கண்டவுடன் 
எப்படி மறைந்து கொள்ளலாம் 
என வெட்கப்படும் உன்னால் 
என் பாடு சொல்ல வழியில்லையே?

இப்போது சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
ஒரு கல்லை எடுத்தேன் ..!
நண்பன் சொன்னான் ....
மரத்துக்குஎறியப்போகிறான் ..
என்றான் .....!!!

நண்பி  சொன்னால் ....
அருகில்குட்டைக்குள் ...
எறியப்போகிறான் ......!!!

கையில் இருந்த கல் ...
கெஞ்சியது என்னை ....
ஒருமுறை வானத்தை நோக்கி ....
எறிந்து விடு .........
எனக்கும் உயரபோக .....
விருப்பம் இருகிறது ..............!!!

நாம் ....
பிறர் விருப்பத்தையும் .....
நம் விருப்பத்தையும் ......
நிறைவேற்றுகிறோம் ......
நம்மோடு இருப்பவர்களின் .....
விருப்பத்தை நிறைவேற்ற.... 
தவறுகிறோம் ...............!!!

கணவனின் விருப்தத்தை .....
உறவினர் விருப்பத்தை .....
நிறைவேற்றும் மனைவியின் .....
விருப்பத்தை கண்டறிவோர் சிலரே .......!!!

&
சமூக சிந்தனை கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
முட்டை ....
கூடை சுமப்பவனே ..!
கவனம் நீ சுமப்பது ....
வெறும் முட்டை அல்ல....
எங்கள் வருங்கால சந்ததி ...!!!

&
சின்ன கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
இன்று ......
குடும்பங்களின் நிலைமை....
குடும்பத்துடன் போசுவதே ........
கிடையாது ......!!!

இருந்தால் .......
போல் தனியே இருந்து ....
சிரிக்கிறார்கள் ...
மௌனமாக ஓரக்கண்ணீர் .....
வடிக்கிறார்கள் .........!!!

உரத்த குரலில் 
திடீரென கத்துகிறார்கள் ....
உறவினரை கண்டால் ....
வாய்க்குள் ஒரு சிரிப்பு ...........!!!

இத்தனைக்கும் ஆட்டிப்படைக்கிறது ....
தொலைக்காட்சி .....!!!

&
சமூக சிந்தனை கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் விவசாயின் உயிர்

போராட்டம் தோன்றாது

பிரபஞ்ச வணக்கம்