Skip to main content

குடும்பம் ஒரு கோயில்

 என் தாயே ...

உன் பாத திருவடியே ...
உலகில் அத்தனை ஆலயங்களின் ...
திறவு கதவு ....!!!

என் தாயே ....
உன் கருணை கொண்ட பார்வையே ....
நான் வணங்கும் இறைவனின் ...
கருணை பார்வை ....!!!

என் தாயே ....
என்னை விட்டு நீங்கள் இறை ...
பயணம் சென்றாலும் ....
உன் திருப்பாதத்தின் நினைவுகள் ...
தான் நான் வணங்கும் இறைவன் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
குடும்ப கவிதைகள் 
(அம்மா கவிதை )
கவிப்புயல் இனியவன்
மார்பையே ....
என்னை சுமக்கும் சுமை ...
தாங்கியே சுமர்ந்து வளர்த்தவரே ...
என் அருமை தந்தையே ....!!!

யாருக்கும் அடிபணியாதே ....
யாருக்கும் தலை குனியாதே ...
யாருடைய சொத்துக்கும் ஆசைப்படாதே ....
யாருக்காவவும் உன்னை இழக்காதே ...
அத்தனையும் பொன்மொழிகள் ...
வாசித்து பெறவில்லை ...
என் தந்தையின் வாழ்க்கையில் ...
பெற்றேன் ....!!!

உலகில் அனைவருக்கும் ...
சிறந்த முன்மாதிரியாளன் ...
தந்தை பண்போடு இருக்கும் தந்தை ...
என் தந்தை எனக்கு கிடைத்த ...
எல்லை அற்ற பொக்கிஷம் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
குடும்ப கவிதைகள் 
(அப்பா  கவிதை )
கவிப்புயல் இனியவன்
என் அப்பாவே ..!
சிறுவயதில்
நடைபழக்கிய தந்தையே ..
நடை பழகினேன் ....
மிக விரைவாய் ஓடினேன் ....
காலம் அதிவேகத்தில் ....
என்னையும் அப்பாவாக்கியது ....!!!

என் 
குழந்தைக்கும் நடை பழக்கினீர் ....
விடைகொடுத்தது உங்கள் நடைக்கு ....
முதுமை என்னும் காலம் ....!!!

இப்போ உங்களுக்கு ஊர் சுற்றி ....
காட்டும் பாக்கியத்தை பெற்றேன் ....
மெதுவாக.. மெதுவாக... மெதுவாக ...
உங்களுடன் நானும் நடை பழகுகிறேன் ....
முதுமையின் நடையிலும் ஒரு அழகு ....
இருக்கத்தான் செய்கிறது .....!!!


கே இனியவன் 
குடும்ப கவிதை
கவிப்புயல் இனியவன்
தாயே.... 
உனக்கு முன் .......
நான் இறந்தால் .....
என் கல்லறையில்...... 
உன் பெயரை எழுதி வை
கல்லறையில் இருந்து .....
உன்னை நினைப்பதற்கு அல்ல
மீண்டும் உனக்கே மகனாய் ....
பிறப்பதற்காக .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
குடும்ப கவிதைகள் 
(அம்மா கவிதை )

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் விவசாயின் உயிர்

போராட்டம் தோன்றாது

போதும் என்ற மனமே.