Skip to main content

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

 பேசமுடியாத வயதில்.....

அழுகை மூலம் குழந்தையின்.....
நோயையும் பசியையும்.....
கண்டறியும் ஞானி தாய்......!

பொதுவாக.........
வெட்டினால் உறவு பிரியும்....
தொப்பில் கொடியை வெட்டிய.....
பின்னரே உறவு பெருகும்.......!

^^^
கவிப்புயல் இனியவன்
தாய் தந்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
தந்தையின் அழகு.....
முதுமையில் தெரியும்.....
ஒவ்வொரு தோல் சுருக்கமும்....
ஒவ்வொரு கடின தியாகத்தை.....
எடுத்து காட்டும்.......!

எனக்கு நினைவுள்ளவரை.....
கோயிலில் அவர் சுவாமி.....
சுமந்ததே இல்லை ஆனால்.....
என்னை தோளில் சுமக்காத.....
நாளே இல்லை.........................!

^^^
கவிப்புயல் இனியவன்
தாய் தந்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
முதல் ........
காதல் மட்டுமல்ல ...
தந்தையிடம் முதல் அடி 
ஆசிரியரிடம்  முதல் திட்டும்  
மறக்க முடியாதவையே ...!

தந்தையே நீர் திடீர் என 
எதற்காக கோபப்பட்டீர் ..?
எதற்காக அந்த அடி அடித்தீர் ..?
என்றெல்லாம் எனக்கு 
இன்றுவரை -புரியவில்லை ...!

ஆனால் .....
அந்த அடிதான் எனக்கு..... 
கடைசி அடி என்பது.......
வாழ்க்கையில் மறக்க .....
முடியாத அடி ....!

-----------
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
கவிப்புயல் இனியவன்
------------
கவிப்புயல் இனியவன்
தினமும் அர்சனை ...!
முகம் பார்த்து ......
பேச மாட்டார் ....!
ஒரு சில நேரங்களில் .....
உரத்த குரல் ஆனால் ......
ஒருநாளும் சிறு அடிகூட .....
அடித்த தில்லை ...!

நீங்கள் சொன்ன 
அர்ச்சனைதான் எதிர் 
கால வாழ்க்கை தத்துவம் 
இன்று உணர்ந்தேன் 
தந்தையே ....!

-----
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
கவிப்புயல் இனியவன்

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் விவசாயின் உயிர்

போராட்டம் தோன்றாது

போதும் என்ற மனமே.