Skip to main content

ஒரு நிமிட உலகம்

 கூடு திறந்தால் காடு 

-----
அந்த மரண வீட்டில் ....
அப்படி ஒரு சனக்கூட்டம் ....
ஆராவாரமான மரணவீடு ....
ஓலமிடுபவர்கள் ஒப்பாரி ...
சொல்பவர்கள் நிறைந்து ...
காணப்பட்டனர் .....
மூன்று நாட்களாக ...
கண்ணீர் விழா ....!!!

சடலம் இருக்கும் பெட்டி ...
அலங்காரத்தால் ஜொலிக்கிறது ....
குளிரூட்ட பட்ட ஊர்தியில் ...
சடலம் வைக்கப்படுகிறது ....
மந்திரி வந்து அஞ்சலி செலுத்த ....
வீதியெங்கும் வாகன நெரிசல் ....
வீதி எங்கும் நிறுத்தி நிறுத்தி ...
பறை சத்தம் காதை கிழித்தது ....!!!

சடலம் போகும் பாதையில் ....
விபத்தில் இறந்த எருமைமாட்டு ...
சடலத்தை நாய்களும் காகங்களும் ....
குதறி எடுத்தபடி இருந்தன ...
இறந்தபின்னும் மற்றவைக்கு ...
உதவும் அந்த எருமையின் இறப்பு ....!!!

இறப்புக்கு முன்னரே ....
மனிதனும் மிருகமும் ....
இறந்துவிட்டால் எல்லாமே ...
சடலம் தானே .....!
எல்லா உயிரினத்தின் வாழ்வும் ...
அடுத்த ஒரு நிமிடம் கூட ....
உத்தரவாதம் இல்லை ....!!!

^^^
ஒரு நிமிட உலகம் 
...............வாழ்வியல் கவிதை 
**கூடு திறந்தால் காடு **
+
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
காட்டு மரமும் வீட்டு மரமும்
-----
வேகமாக வெட்டப்பட்டு ....
வருகின்றன காட்டு மரங்கள் ...
விறக்குக்காக அல்ல ....
கோடரிக்கு பிடிகளாக ....
கூடி போராடமுடியாத ....
காட்டு மரங்கள் முடிவுக்கு ....
வீட்டு மரங்களுடன் ....
கலப்பு திருமணம் செய்வதற்கு ....!!!

காட்டு மரங்கள் கொஞ்சம் ....
வீரம் நிறைந்தவை வலிமையானவை  ...
அவை வளர்க்கப்படும் வளரும் சூழலே ....
கொடிய மிருகங்கள் ஊர்வன மத்தியில் ...
வாழும் சூழலே அவற்றின் குணத்துக்கு ...
காரணமாக இருக்குமோ ....?

வீட்டு மரங்கள் மிகவும் ....
மென்மையானவை வீரமும் ...
வலிமையையும் குறைந்தவை ....
மனிதர்கள் மத்தியில் வளர்வது ....
காரணமாக இருக்குமோ ....?

காட்டு மரம் வீட்டு மரத்தை ....
பார்க்க வந்தது வீட்டு மரங்கள் ...
பயத்தால் நடுங்கின மௌனமாகின ....
நாங்கள் உங்களோடு கலப்பு ...
திருமணம் செய்ய விரும்புகிறோம் ...
எங்களை காப்பாற்ற வேறு வழியில்லை ....!!!

வீட்டு மரங்கள் கடுமையாக ....
எதிர்த்தன உங்களை மணந்தால் ...
நாங்களும் இறக்க நேரிடும் ...
முடியாது முடியவே முடியாது .....
காட்டு  மரம் கவலை படவில்லை ....
மனிதர்கள் மத்தியில் வளரும் ...
வீட்டு மரங்களுக்கு எப்படி ...?
சுயநலம் இல்லாமல் போகும் ...???

^^^
ஒரு நிமிட உலகம் 
...............வாழ்வியல் கவிதை 
**காட்டு மரமும் வீட்டு மரமும்**
+
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பிறப்பும் இறப்பும் சமன்
---
இறந்த பிணத்தை .....
இறக்கப்போகும் பிணங்கள் ....
ஒன்றுகூடி ஓலமிட்டன .....!!!

இறந்த பிணம் ...!!!
கோபத்தில் பேசத்தொடங்கியது ......
இறக்கபோகிறவர்களே....
வாருங்கள் இறக்கபோவதற்காக....?

பிறப்பு இனிமையானது ....
இறப்பு கொடுமையானது ....
என்ற எண்ணத்தில் ஒலமிடாதீர் ....
பிறப்பு இயற்கை தந்த பரிசு ....
இறப்பு இயற்கை தந்த கொடை.....
புரிந்து கொண்டவனே ஞானி ....!!!

எல்லா உயிரும் ஒருநொடி ....
தொடக்கம் எல்லா உயிரின் ....
அடக்கமும் ஒரு நொடி தான் .....
அந்த ஒருநிமிடத்தில் தான் ....
உலகமே இயங்குகிறது ......!!!

^^^
ஒரு நிமிட உலகம் 
...............வாழ்வியல் கவிதை 
** பிறப்பும் இறப்பும் சமன் **
+
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தப்புக்கணக்கு 
-----
தூரத்தில் இருப்பதிலும் ....
மறை பொருளாய் இருப்பதிலும் ....
எப்பவுமே மனித மனத்துக்கு .....
ஒரு இச்சையுண்டு....!!!

எனக்கு அது விதிவிலக்கல்ல ....
நிலாமீது ஒரு காதல் ....
விண்மீன்கள் மீது மோகம் ....
இரண்டையும் ரசிப்பதற்கு ....
கனவு விமானத்தில் ...
விண் மண்டலம் சென்றேன் .....!!!

நிலவருகே சென்றேன் ....
வா என்று அழைகவில்லை .....
அவள் மென்மை அழகில் ....
மயங்கினேன் என்னை ....
மறந்து கவிதை எழுதினேன் .....!!!

மெல்ல சொன்னது நிலா ....
அதிகம் என்னில் காதல் ....
கொள்ளாதே - எனக்கும் ...
இருட்டு உண்டு என்னுள் ...
இருளும் உண்டு .......!!!

நிலா அருகில் துடித்து ....
நடித்துகொண்டிருந்த ....
விண் மீன்கள் கண்களை ...
சிமிட்டி சிமிட்டி என்னை ....
அழைத்துக்கொண்டிருந்தன .....
அருகில் சென்றேன் .....
தள்ளி போய்விடு என்று ...
கத்தியது .....!!!

திகைத்து நின்றேன் ....
நீதானே என்னை கண்ணால்...
சிமிட்டி சிமிட்டி வா வா ...
என்றாய் இப்போ திட்டுகிறாயே ....?

போடா மூடனே ....
என் குணவியல்பு அதுவே ....
நீ தப்பாக நினைத்தது -என் 
தப்பில்லையே ...???

மனித மனம் இப்படித்தான் ...
அருகில் உள்ள அழகை ரசிக்காது ...
தொலைவில் உள்ளத்துக்கு ஆசைபடும் ....
அவமானமும் படும் ....!!!

^^^
ஒரு நிமிட உலகம் 
...............வாழ்வியல் கவிதை 
**தப்புக்கணக்கு **
+
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
ஆடையே மனித குணம் 
--
விதம் விதமாய் ஆடைகள் ....
வண்ண வண்ண நிறங்கள் ....
காலத்துக்கேற்ற நாகரீகங்கள் ....
ஆடைகள் வண்ணங்களை ....
மட்டும் தோற்றுவிப்பதில்லை ....
மனித எண்ணங்களையும் ....
தோற்றுவிக்கும் ......
"ஆடைகள் உடலை மட்டும் "
மறைப்பதில்லை -பிறர் 
மனதையும் மறைக்க வேண்டும் ....!!!

ஆடை பாதி ஆள் பாதி ...
என்றாகள் எம் முன்னோடிகள் ....
அத்தனை உண்மை பார்த்தீர்களா ..?
ஆடை அலங்காரம் ஒருவனின் ....
எண்ணத்தை வெளிப்பதும் ...
என்பதையே அப்படி சொன்னார்கள் ....!!!

ஆடை 
ஆயுளை கூட்டவேண்டும் ....
அறிவை அதிகரிக்க வேண்டும் ....
அன்பை பெருக்க வேண்டும் ....
கலாச்சாரத்தை வளர்க்கவேண்டும் ....
ஒழுக்கத்தை பேணவேண்டும் ....!!!

^^^
ஒரு நிமிட உலகம் 
...............வாழ்வியல் கவிதை 
**ஆடையே மனித குணம் **
+
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
ஆறாம் அறிவு  இதுதானா ...?
---
ஆறறிவை பெற்ற மனிதன் ....
ஆடையால் மானத்தை காக்கிறான் ....
ஆடையே போடாத மிருகத்திடம் ....
ஆறறிவு மனிதனிடம் இல்லாத ....
அற்புத பண்பு இருக்கிறதே -அவை ...
கற்பழிப்பில் ஈடுபடுவதில்லை ....!!!

மேலாடையாய் தம் தோலை ....
மறைத்து மானத்தை காக்கும் ....
மிருகங்களின் தோலை மனிதன் ....
மேலாடையாய் போடுகிறான் ....
இருந்துமென்னபயன்...?
மேலான சிந்தனைகள் இல்லையே ....
பகுத்தறிவு என்ற ஆறாம் அறிவை ...
மனிதனுக்கு பறித்துண்ணத்தான் ...
கொடுத்தானோ ....?

^^^
ஒரு நிமிட உலகம் 
...............வாழ்வியல் கவிதை 
**ஆறாம் அறிவு இதுதானா ...? **
+
கவி நாட்டியரசர் 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
நீ 
என்னை விட்டு பிரிந்து ...
பலகாலங்கள் ஆகிவிட்டது ...
பலமுறை என் இதயத்துக்கு ...
சொல்லிவிட்டேன் ....
நம்பமாட்டேன் என்கிறது ...
என் இதயம் .....!!!

ஒருமுறை ...
நீ என் இதயத்தில் இருந்த ....
இடத்துக்கு வந்து ஆறுதல் ....
சொல்லிவிட்டு போவாயா ....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நிஜமான வாழ்க்கை....
கிடைக்கவில்லை ....
கற்பனையில் என்றாலும் ....
வாழவிடு ....!!!

வாழ்ந்தால் 
உன்னோடுதான் ...
வாழ்வேன் அடம்பிடிகிறது ...
மனசு .......!!! 

மடிந்தால் ....
உன் நினைவோடு மடிவேன் ....
செத்து துடிக்கிறது ....
இதயம் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
மரணத்தில் ஏன் அழுகிறாய்....?
-----
குழந்தை பிறந்தது ....
பேர் சூட்டும் விழா ....
உறவினர் வந்தனர் ....
கூடி சாப்பிட்டனர் ....
குதூகளித்தனர் ....
கலைந்தனர் ....!!!

ஆண்டு ....
ஒன்று நிறைவு ....
பிறந்தநாள் வைபவம் ....
கேக் வெட்டினர் ....
பாட்டு பாடினர் ....
கூடி சாப்பிட்டனர் ....
குதூகளித்தனர் ....
கலைந்தனர் ....!!!

திருமண அழைப்பு ....
உறவுகள் குவிந்தன ....
ஆசீர் வாதம் வழங்கினர் ....
கூடி சாப்பிட்டனர் ....
குதூகளித்தனர் ....
கலைந்தனர் ....!!!

மரண அறிவிப்பு ....
உறவுகள் கூடினர் ....
ஒப்பாரி வைத்தனர் ...
ஓலமிட்டனர் ....
சோகத்தில் நின்றனர் ....!!!

எல்லா நிகழ்விலும் ....
சிரித்த மனிதன் ...
மரணத்தில் மட்டும் ....
அழுவதேன் .....???

அடுத்து தனது மரணம் ...
பயத்தால் அழுகின்றானா ....?
இத்தனை காலமும் ...
உதவிய ஓருவன் இறந்துவிட்டானே ....
ஏக்கத்தால் அழுகின்றானா ....?
இத்தனை காலம் அத்துணை ....
இன்பத்தை தந்தவன் ....
இறந்துவிட்டானே -என்ற ...
வருத்தத்தால் அழுகின்றானா ....?

மொத்தத்தில் மரணத்தில் அழுகை ...
சுயநலத்தின் ஒன்றாய் தான் 
இருக்கவேண்டும் ......
பிறப்பு இன்பமென்றால் ....
இறப்பும் இன்பம்தானே ...
உணர்ந்தவனுக்கேன் அழுகை ....!!!

^^^
ஒரு நிமிட உலகம் 
...............வாழ்வியல் கவிதை 
**மரணத்தில் ஏன் அழுகிறாய் **
+
கவி நாட்டியரசர் 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்Reply
share

Comments

Popular posts from this blog

நெஞ்சு பொறுக்குதில்லையே

என் அன்புள்ள ரசிகனுக்கு

ஒரு வழிப்போக்கனின் கவிதை