Skip to main content

இவை எனக்கு சிறந்தவை


கவிப்புயல் இனியவன்

பிறந்த நாட்டில் ....
பிறந்த ஊரில் ....
ஒருபிடி மண் தான் ....
எனக்கு ....
பொன் விளையும் பூமி .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -01

---
பேசும் மொழிகளில் ....
எந்த மொழியில் ....
கலப்படம் இல்லையோ ....
அந்த மொழி ....
எனக்கு தாய் மொழி ..........!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -02

மேலும் தொடரும் ....................
பேசும் போது எவரின்.....
மனம் புண்படவில்லையோ ......
எந்த சொல் மனதை ......
காயப்படுத்தவில்லையோ ......
அந்த மொழியே எனக்கு .....
செம்மொழி ..............!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -03

தொடரும் .....
கவிப்புயல் இனியவன்
பேசிய வார்த்தைகளால் .....
கிடைத்த புகழைவிட.....
பேசாமல் விட வார்த்தைகளால் .....
நான் பெற்ற இன்பமும் .....
நன்மையும் எனக்கு .....
நோபல் பரிசு ................!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -04
தொடரும் ...
கவிப்புயல் இனியவன்
நாடார்த்திய விழாக்களில் ......
உறவுகள் நட்புகள் .......
முகம் சுழிக்காமல்......
நாடார்த்திய விழாவே .......
எனக்கு .......
பொன் விழா .........!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -05
தொடரும் ...
கவிப்புயல் இனியவன்
பாடிய பாடல்களில் ......
இசையமைக்காமல் .....
பாடிய பாடல் .....
அம்மா இங்கே வா வா ....
ஆசை முத்தம் தா தா ......
என்ற பாடல் தான் ......
எனக்கு ......
தேசிய விருது பாடல் ....!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -06
தொடரும் ...
கவிப்புயல் இனியவன்
என் சராசரி அறிவை .....
சாதனையாளர் கற்கும் ....
கூடத்தில் என்னையும் .....
கற்பிக்கவைத்து .....
என்னை இன்று ஒரு .....
சாதனையாளனாக்கிய .....
என் ஆசானே எனக்கு ......
முழு முதல் கடவுள் .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -07
தொடரும் ...
Nisha
அட இப்போது தான்  இனியவன் அவர்களை காணவில்லையே என்று  நினைத்தேன்! 

 நலம் தானே சார்? ஆசிரியர் தின நல் வாழ்த்துகள் சார்.
*சம்ஸ்
Nisha wrote:
அட இப்போது தான்  இனியவன் அவர்களை காணவில்லையே என்று  நினைத்தேன்! 

 நலம் தானே சார்? ஆசிரியர் தின நல் வாழ்த்துகள் சார்.
ஐயாவும் உங்களை காணவில்லை என்று நினைத்தபடிதான் உள்ள நுழைந்தார்களாம்  சிரி
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ் wrote:
Nisha wrote:
அட இப்போது தான்  இனியவன் அவர்களை காணவில்லையே என்று  நினைத்தேன்! 

 நலம் தானே சார்? ஆசிரியர் தின நல் வாழ்த்துகள் சார்.
ஐயாவும் உங்களை காணவில்லை என்று நினைத்தபடிதான் உள்ள நுழைந்தார்களாம்  சிரி
ஆம் சிலநாட்கள் நானும் வரமுடியவில்லை 
நெட் வேலைசெய்யவில்லை . 

எங்கள் நாட்டில் இப்போ இல்லை ஆசிரியர் தினம் 
இந்தியாவில் தான் இப்போ 

என்றாலும் வாழ்த்தியமைக்கு நன்றி 
வணக்கம்
Nisha
*சம்ஸ் wrote:
Nisha wrote:
அட இப்போது தான்  இனியவன் அவர்களை காணவில்லையே என்று  நினைத்தேன்! 

 நலம் தானே சார்? ஆசிரியர் தின நல் வாழ்த்துகள் சார்.
ஐயாவும் உங்களை காணவில்லை என்று நினைத்தபடிதான் உள்ள நுழைந்தார்களாம்  சிரி

ஓஹோ அப்படியா?
கவிப்புயல் இனியவன்
பசிக்கும் குழந்தையின் .....
அழுகுரல் கேட்க்காமலும் .....
கை நீட்டி பசிக்காக .....
உதவி கேட்காத ...
முதியவரையும் .......
தெருவில் காணாத நாள் ....
எனக்கு .....
சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -08
தொடரும் ...
கவிப்புயல் இனியவன்
எனக்கு வயது பத்து .....
என் தம்பிக்கு வயது எட்டு .....
தம்பியை அடித்த அவன் ....
நண்பனை நான் அடித்தேன் ....
அந்த நாள் நான் ஏதோ....
மாவீரன் போல் நினைத்த ....
நாள் - எனக்கு மனதில் ...
மல்யுத்த வீரன் நினைப்பு ......!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -09
தொடரும் ...
கவிப்புயல் இனியவன்
நாற்பது பேர் கொண்ட .....
வகுப்பறையில் .....
முதல் மாணவனாய் வந்து ....
பரிசுபெற்று மேடையை ....
விட்டு இறங்கியபோது ....
நான் நடந்த நடை தான் 
எனக்கு ......
ராஜ நடை .........!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -10
தொடரு
கவிப்புயல் இனியவன்
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
கவிப்புயல் இனியவன்Reply
Reply
share

Comments

Popular posts from this blog

நெஞ்சு பொறுக்குதில்லையே

என் அன்புள்ள ரசிகனுக்கு

ஒரு வழிப்போக்கனின் கவிதை