Posts

Showing posts from 2020

தத்துவ கவிதைகள்

Image
  தத்துவ கவிதைகள் ---------------------------------- இறப்பு வீட்டுக்கு சென்ற........ பல அனுபவங்களை.......... பார்த்தபோதுகேட்ட போது..... ஒரு உண்மை புலப்பட்டது...... இறந்த பின் எல்லோரும்........ புனிதராகிவிடுகிறார்கள்....... இப்போதுதான் எனக்கும்...... இறப்பில் ஒரு ஈர்ப்பு வருகிறது.......! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன் more_horiz on Sat Sep 23, 2017 9:00 pm by கவிப்புயல் இனியவன் மறதி வாழ்க்கையில்...... ஒரு இன்பம்........ மரணம் வாழ்க்கையில்...... பேரின்பம்............ மரணத்துக்காக ஏங்கும்..... ஆத்தாவுக்கு புரியும்...... மரணத்தின் இன்பம்........! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன் more_horiz on Sat Sep 23, 2017 9:19 pm by கவிப்புயல் இனியவன் முயற்சி என்பது..... வெற்றியல்ல........ வெற்றி பெறவைப்பது........ பயிற்சியில்லாத முயற்சி...... தோற்றுப்போகும்........ முயற்சியும் பயிற்சியும்..... இரட்டை குழந்தைகள்....! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன் more_horiz on Sun Sep 24, 2017 1:28 pm by கவிப்புயல் இனியவன் வலிகளையும்...... துன்பங்களையும்...... மறக்க உதவும் ...

சமூக விழிப்புணர்வு

Image
  சமூக தளங்கள் ........ சமூகத்தை சீர் படுத்தும் ...... தளங்களாக இருக்கவேண்டும் ..... சீரழிக்கும் தளங்களாக....... மாறிவிடக் கூடாது ......!!! இராணுவ புரட்சி மூலம்..... ஆட்சியை மாற்ற இருந்தவர்களை..... சமூகதள தகவல் மூலம் மக்கள்..... புரட்சி வெடித்து இராணுவ புரட்சி..... தோற்கடிக்கப்பட்டற்கு சமூக தள..... செய்தி பரிமாற்றம் உதவியதை..... யாரும் மறந்திடமாட்டார்கள்.........!!! தலைவன் இல்லாமல் தம் இன..... பண்பாட்டை இளைஞர் போராட்டமாய்..... போராடி வெற்றி கண்ட ஜல்லிக்கட்டு...... போராட்டம் சமூக தள பரிமாற்றம்..... உலகையே திரும்பி பார்க்கவைத்து...... உலக புரட்சியின் புதிய பரிமாற்றத்தை..... படைத்தது சமூக தள ஆயுதம்........!!! மறுபுறத்தில் வேதனையான ....... சகிக்க முடியாத தகவல் பரிமாற்றம்......... நடைபெற்றுகொண்டிருப்பதும் ........ மறுப்பதற்கில்லை......... தனிப்பட்ட பகைமைக்கும்......... விருப்பு வெறுப்புக்கும் சமூகதளம்...... பயன்படுவது வேதனை அளிக்கிறது.........!!! எங்கோ நடைபெற்ற நிகழ்வை....... திரித்து கூறுதல் பொருத்தமற்ற...... ஊகங்களை மக்கள் மத்தியில்...... பரப்புதல் ஒருவகை சமூக குற்றமே...... உண்மையை ப...

ஏழையாக இருக்கிறேன்

Image
  ஏழையாக இருக்கிறேன் ஏமாளியாக இருக்கவில்லை....!!! ஏழ்மையில் வாழ்கிறேன் எடுப்பார் கைப்பிள்ளையக இருக்கமாடேன்....!!! மன்னிக்க மனம் அதிகமில்லை மனம் புண்படுமாறு நடப்பதில்லை....!!! கற்காதவர் மத்தியில் பேசமாட்டேன் கற்றவர் மத்தியில் கவனமாக பேசுவேன்...!!! அறிவாளியாக என்னை கருத மாட்டேன் அறிவை தேடாமல் இருக்க மாட்டேன்....!!! எல்லாம் முடியும் என்னால் என்று கூறமாட்டேன் எதுவும் முடியாது என்று இருக்கமாட்டேன்....!!! எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு... என்பதை நிச்சயம் நம்புகிறேன் .. முடிவு இல்லையென்றால் ...... முடிவில்லையென்று கலங்கமாட்டேன் ..!!! + கவிப்புயல் இனியவன்  thumb_up Like thumb_down Dislike more_horiz on Sat 3 Oct 2015 - 19:12 by நண்பன் அருமையாக உள்ளது கவிதை அறிவாளியாக என்னை கருத மாட்டேன் அறிவை தேடாமல் இருக்க மாட்டேன்....!!! thumb_up Like thumb_down Dislike more_horiz on Mon 5 Oct 2015 - 18:23 by கவிப்புயல் இனியவன் நண்பன் wrote: அருமையாக உள்ளது கவிதை அறிவாளியாக என்னை கருத மாட்டேன் அறிவை தேடாமல் இருக்க மாட்டேன்....!!! நன்றி நன்றி thumb_up Like thumb_down Dislike more_horiz Reply  Rep...

மரணத்துக்கு ஒரு கவிதை

  இன்பமாக வாழ்ந்து ..... இல்லற வாழ்க்கையை ..... இறுதிவரை வாழ்ந்தவனுக்கு ..... இறைவன் கொடுக்கும் .... இன்ப அன்பளிப்பே .... மரணம் .....!!! நோயினால் அவத்திப்பட்டு..... எப்போது தனக்கு மரணம் .... காத்திருக்கும் நோயாளிக்கு ..... இறைவன் கொடுக்கும் ..... அளப்பரிய வெகுமதி .... மரணம் .......!!! தெரியாமல் மனிதனாய் .... பூவுலகில் பிறந்தவனின் .... முட்டாள் தனமான செயல் .... தற்கொலை மரணம் .....! இறைவன் தந்த உடலையும் .... உயிரையும் -அனுமதியின்றி .... பறிக்கும் செயலே தற்கொலை....  மரணம் ...!!! மரணத்தை விரும்புபவன் .... மரணத்தோடு வாழ்பவன் ..... மரணம் இயற்கையின்கொடை..... மரணத்தை உணர்ந்து வாழ்பவன் .... மரணத்தை தவமாய் கருதுபவன் .... பிரபஞ்சத்தில் ஞானி

கைபேசிக்கு ஒரு கவிதை

  கையோடு ஒட்டி இருக்கும் ... கைபேசியை போல் ... நெஞ்சோடு ஒட்டியிருக்கும் .... நினைவுகளும் .... தூங்காத இரவுகளை .... நீண்டுசெல்ல வைக்கிறது ...!!! உன் அழைப்பு வரை  தலையணையோடு..... என்னோடு காத்திருகிறது .... கைபேசி - என்ன செய்வது ...? என்னோடு சேர்ந்து அம்மாவிடம் .... திட்டு வாங்குகிறது அதுவும் ...!!! மற்றவர்களிடம் இருப்பது .... கைபேசி - என்னிடம் இருப்பது ... உன்னோடு பேசும் உயிர் பேசி ...!

ஊரை திருத்த முன்

Image
  ஊரின்....  நாக்கை நீ அடைக்கமுதல் உன் நாக்கை  நீ அடக்கு ..... தானாக அடங்கும் உலகம் ...!!! சிந்தித்து பேசத்தெரியாத உன்னைவிட ... வேதனைப்படுத்தி பேசும்  உன்னைவிட ... பண்பாக்க பேசதெரியாத உன்னைவிட ... பேசவே முடியாமல் இருக்கும் உயிர்கள் .... எத்தனையோ மடங்கு மேல் ...!!! உறுதியில்லாத மனம் உள்ளவன் .. உலகில் வாழ்ந்து பயனில்லை ... மனம் திறந்து பேசத்தெரியாதவன் .... மனிதனாக வாழ தகுதியில்லாதவன் ...!!! thumb_up Like thumb_down Dislike more_horiz on Tue 6 Oct 2015 - 22:36 by நண்பன் ஊரைத் திருத்த முயலுமுன் உன்னைத் திருத்திக்கொள் உறுதியில்லாது மனம் உள்ளது உலகில் வாழ்ந்து பயனில்லை அருமை thumb_up Like thumb_down Dislike more_horiz on Wed 7 Oct 2015 - 22:14 by கவிப்புயல் இனியவன் நண்பன் wrote: ஊரைத் திருத்த முயலுமுன் உன்னைத் திருத்திக்கொள் உறுதியில்லாது மனம் உள்ளது உலகில் வாழ்ந்து பயனில்லை அருமை நன்றி நன்றி thumb_up Like thumb_down Dislike more_horiz Reply  Reply  share  Home  Last 

குடும்பம் ஒரு கோயில்

Image
  என் தாயே ... உன் பாத திருவடியே ... உலகில் அத்தனை ஆலயங்களின் ... திறவு கதவு ....!!! என் தாயே .... உன் கருணை கொண்ட பார்வையே .... நான் வணங்கும் இறைவனின் ... கருணை பார்வை ....!!! என் தாயே .... என்னை விட்டு நீங்கள் இறை ... பயணம் சென்றாலும் .... உன் திருப்பாதத்தின் நினைவுகள் ... தான் நான் வணங்கும் இறைவன் ...!!! + கவிப்புயல் இனியவன்  குடும்ப கவிதைகள்  (அம்மா கவிதை ) thumb_up Like thumb_down Dislike more_horiz on Wed 4 Feb 2015 - 12:48 by கவிப்புயல் இனியவன் மார்பையே .... என்னை சுமக்கும் சுமை ... தாங்கியே சுமர்ந்து வளர்த்தவரே ... என் அருமை தந்தையே ....!!! யாருக்கும் அடிபணியாதே .... யாருக்கும் தலை குனியாதே ... யாருடைய சொத்துக்கும் ஆசைப்படாதே .... யாருக்காவவும் உன்னை இழக்காதே ... அத்தனையும் பொன்மொழிகள் ... வாசித்து பெறவில்லை ... என் தந்தையின் வாழ்க்கையில் ... பெற்றேன் ....!!! உலகில் அனைவருக்கும் ... சிறந்த முன்மாதிரியாளன் ... தந்தை பண்போடு இருக்கும் தந்தை ... என் தந்தை எனக்கு கிடைத்த ... எல்லை அற்ற பொக்கிஷம் ....!!! + கவிப்புயல் இனியவன்  குடும்ப கவிதைகள்  (அப்பா  கவ...